நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு
ஆடம்பர ஐந்து நட்சத்திர ஹோட்டல் உணவு வழங்கப்படுவதாக சமூகத்தில் பரவிவரும் கருத்து தவறானது என நாடாளுமன்ற பொதுச் செயலாளர் திருமதி குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
ஹிரு தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாங்கள் வீட்டில் சாப்பிடுவதைப் போன்றே, இறைச்சி அல்லது மீன், கெக்கரிக்காய், வெள்ளரிக்காய் மற்றும் வெண்டிக்காய் போன்ற காய்கறிகளுடன் உணவை வழங்குகிறோம் எனக கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது சம்பளம் அல்ல கொடுப்பனவே என்றும் தெரிவித்தார்.