முன்னாள் இராஜாங்க அமைச்சர்
சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று (20) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பாக செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அறிக்கையின் மூலம் தெரிய வந்த தகவல்கள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காகவே.
இதன்படி, சிவநேசதுரை சந்திரகாந்தனை காலை 9.00 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரை கடந்த வரும் 12 ஆம் திகதி திணைக்களத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், இம்மாதம் 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதிக்கு இடைப்பட்ட திகதியில் ஆஜராகுவதாக கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.
இதன்படி முன்னாள் இராஜாங்க அமைச்சர் இன்று (20) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்
சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான ஆசாத் மௌலானா செனல் 4 வில் கருத்து வெளியிட்டிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைப் பயங்கரவாதத் தாக்குதலுடன் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்பு இருப்பதாக அவர் அங்கு தெரிவித்தார்.