ஏஆர் ரஹ்மானிடமிருந்து
பிரிவதாக மனைவி சாயிரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதோடு பிரிவுக்கு என்ன காரணம்? என்பது பற்றி சாயிரா பானு - ஏஆர் ரஹ்மான் சார்பில் வழக்கறிஞர் மூலம் கூட்டு அறிக்கையாக விளக்கம் தரப்பட்டுள்ளது.
சாயிரா பானு, அவரது கணவர் ஏஆர் ரஹ்மான் ஆகியோரின் சார்பில் வந்தனா மற்றும் அவரது கணவர் சார்பில் இந்தக் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் சாராம்சம் இவ்வாறு தெரிவிக்கிறது.
திருமணமாகி பல வருடங்கள் கழித்து பிரியும் கடினமான இந்த முடிவை எடுத்துள்ளோம். உணர்ச்சிகரமான அழுத்ததற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தாலும் கூட சிரமம் மற்றும் பதற்றங்கள் இருவருக்கும் இடையே தீர்க்க முடியாத இடைவெளியை ஏற்படுத்தியதை இருவரும் அறிகிறோம்
இந்த இடைவெளியை இணைக்க யாராலும் பாலம் போல் செயற்பட முடியாது. இதனால் இந்த முடிவை வலி மற்றும் வேதனையுடன் இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த இக்கட்டனா நேரத்தில் எமது தனிப்பட்ட உணர்வுக்கு மதிப்பளித்து அனைவரும் செயல்பட வேண்டும்'' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.