பாதுகாப்பு, நிதி திட்டமிடல்
மற்றும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய அமைச்சுக்களை ஜனாதிபதி அதுரகுமார திஸாநாயக்கவின் கீழ் வைத்திருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதியுடன் அரசாங்கத்தின் அமைச்சரவை 22 ஆக இருக்கும்.
இன்று (18) காலை 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இதேவேளை, பிரதியமைச்சர்கள் எதிர்வரும் 21ஆம் திகதி பிற்பகல் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.