(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

சஜித் பிரேமதாச தலைமையிலான
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இரண்டு முஸ்லிம்களும் ஒரு தமிழரும் உள்வாங்கப்படவுள்ளனர் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன.
 
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து ஒருவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து ஒருவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து ஒருவருமாக மூவர் நியமிக்கப்படவுள்ளனர். 
 
IMG 20241118 180142 800 x 533 pixel
 
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது இதனை அவர் உறுதிப்படுத்தினார்.
 
இதுவரையும் இந்த தீர்மானமே எடுக்கப்பட்டுள்ளாகவும் அவர் தெரிவித்தார்.
 
கடந்த தேர்தலில் கூட தேசிய பட்டியல் வழங்குவதாக இந்த மூன்று கட்சிகளுக்கும் உறுதியளித்தும் அதனை வழங்க முடியாது போனதாகவும் ஆனால் இம்முறை இந்த மூன்று கட்சிகளுக்கும் தேசியப்பட்டியல் வழங்க வேண்டும் என்பதில் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியாக உள்ளார் எனவும் தெரிவித்தார்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி