இலங்கையின் வரலாற்றின்
அரசியல் வரைபடம் இதுவரை வடக்குக்கு எதிரான தெற்கின் அரசியலாகவும், தெற்குக்கு எதிரான வடக்கின் அரசியலாகவும் இருந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், இதுவரை காலமும் சந்தேகம், அவநம்பிக்கை, வெறுப்பு, கோபம் ஆகியவற்றை வளர்க்கும் அரசியலே இருந்ததாகத் தெரிவித்த ஜனாதிபதி, இவ்வருட நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி இந்த நாட்டில் பிளவு அரசியல் இனி தேவையில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகளின் பொதுமக்களின் அபிலாஷைகளை ஒரே மையத்துக்கு கொண்டு செல்வதில் இந்தத் பொதுத் தேர்தல் வெற்றி பெற்றுள்ளதாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்த பொதுத் தேர்தலின் மூலம் தேசிய மக்கள் சக்திக்கு எல்லையற்ற அதிகாரம் கிடைத்துள்ளதாகவும் அதன் வரம்புகளை அறிந்து செயற்படுவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
இதன்படி, அந்த வரம்பற்ற அதிகாரத்தை கையாள்வது தொடர்பில் எந்தவித சந்தேகத்தையும் ஏற்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்..