பொதுத் தேர்தல் முடிவுகளின்படி,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணிக்கு (சிலிண்டர்) கிடைத்த தேசியப்பட்டியல்களை முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் ஆகியோருக்கு வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவுக்கு கட்சியின் பெரும்பான்மையான முக்கியஸ்தர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு குழு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த ஒரு குழு இந்த முன்மொழிவுக்கு தங்கள் எதிர்ப்பை வெளியிட்டமை தெரிந்ததே.