இந்த ஆண்டு நடைபெற்ற
நாடாளுமன்றத் தேர்தலில், புதிய ஜனநாயக முன்னணிக்கு (சிலிண்டர்) கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் எம்.பி பதவிகளில் ஒன்றை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பைசர் முஸ்தபாவுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எழுத்துமூலம் முன்வைத்துள்ளது.
பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தேசிய பட்டியலில் இணக்கம் காணப்பட்டதன் பிரகாரம் தமது கட்சிக்கு தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி ஒன்று வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் நாடாளுமன்றத் தேர்தல்- 2024 தேசியப் பட்டியல் உறுப்பினர் நியமனம் தொடர்பாக கடந்த பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து போட்டியிட்டதை நினைவுபடுத்தியுள்ளார்.