கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள்
பலரை ஐக்கிய தேசியக் கட்சியில் இணையுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார்
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது அவருக்கு நெருக்கமான பல முன்னாள் இளைஞர் அமைச்சர்கள் நேற்று முன்தினமிரவு (16) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரைச் சந்தித்து எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளனர்.
காஞ்சன விஜேசேகர, பிரமித தென்னகோன், அநுராத ஜயரத்ன மற்றும் முன்னாள் அமைச்சர்களுடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் கலந்து கொண்டார்.
இதே கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உடனடி மறுசீரமைப்பு தொடர்பில் இந்த கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணையுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.