இலங்கை தமிழரசுக் கட்சியின்
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பா.சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனை கட்சியின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேசியப்பட்டியல் மூலம் எம்.ஏ. சுமந்திரனை உள்வாங்குவது நல்லதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புளொட் சித்தார்த்தன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.