இந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள்
சக்திக்கு 5 ஆசனங்கள் தேசியப்பட்டியல் ஊடாக கிடைத்துள்ளன. இந்நிலையில், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஒருவராக நியமிக்கப்படவுளார்.
இவர் தவிர, ஜனாதிபதி சட்டத்தரணி திசாத் விஜேகுணவர்தன, சட்டத்தரணி ரவி ஜயவர்தன, ஜெனரல் மகேஷ் சேனநாயக்க மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகிய நால்வரை தேசியப்பட்டியலில் உள்வாங்க ஆலோசிக்கப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பரின் பெயர் 5 ஆவதாக இடம்பெற்றிருந்தது.
இருப்பினும் இந்தக் கட்சிக்கு 5 இடங்களே தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக கிடைத்துள்ளமையால் நிசாம் காரியப்பர் உள்வாங்கப்படுவாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியினால் தேசியப்பட்டியலுக்கு தற்போது உள்வாங்கப்படவுள்ள ஐவரில் நிசாம் காரியப்பரின் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
01. ரஞ்சித் மத்தும பண்டார
02. இம்தியாஸ் பாக்கீர் மார்கார்
03. டலஸ் அழகப்பெரும
04. சாகரன் விஜயேந்திரன்
05. நிசாம் காரியப்பர்
06. சுஜீவ சேனசிங்க
07. ஜீ.எல்.பீரிஸ்
08. சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே
09. உபுல் ஜயசூரிய
10. மஹீம் மெண்டிஸ்
11. உபுல் பண்டார திஸாநாயக்க
12. ரோஹன லக்ஷ்மன் பியதாச
13. லிஹினி பெர்னாண்டோ
14. ரவீந்திர சமரவீர
15. அதுலசிறி சமரகோன்
16. கென்னடி குணவர்தன
17. லலித் பிரசன்ன பெரேரா
18. விசாகா சூரியபண்டார
19. மகேஷ் சேனாநாயக்க
20. ரவி ஜயவர்தன
21 டி.டி.பி. விஜேகுணவர்தன
22. எல். மித்ரபாலா
23. பழனிவேலு பரமேஸ்வரன்
24. பாலகிஷ்ணன் சிவநேசன்
25. ஜி. நகுலேஸ்வரன்
26. சந்திம விஜேகுணவர்தன
27. எம். எச்.எம். ரூமி
28. எம்.ஐ.எம். முஹம்மது
29. இந்திக்க பண்டாரநாயக்க