புதிய அரசாங்கத்தின் பிரதமராக
ஹரிணி அமரசூரியவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
பொதுத் தேர்தல் வெற்றியின் பின்னர் நேற்றிரவு (15) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் விசேட கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .
மேலும், புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் திங்கட்கிழமை (18) இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது .
10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய அமர்வு எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது .
அன்றைய தினம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்திற்கு வருவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது .