புதிய அரசாங்கத்தில் பாதாள
உலக ஒழிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் சமூக ஊடகங்கள் ஊடாக பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை மற்றும் சிறைச்சாலை போன்றவற்றின் நடவடிக்கைகளை பின்னடையச் செய்வதற்கு வெளிநாட்டு பாதாள உலக குழுவொன்று ஆறு கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அனுபவமும் முதிர்ச்சியுமான அதிகாரிகளுக்கு எதிராக சமூக ஊடகங்கள் மூலம் பொய்ப் பிரசாரம் செய்து அவர்களை பதவியிலிருந்து அகற்றுவதும், அந்த அரச நிறுவனங்கள் சீரழிந்துவிட்டன என்பதை சமூகத்தை நம்ப வைப்பதும் வெளிநாட்டு பாதாள உலகக் கும்பல்களின் இலக்கு என பாதுகாப்பு புலனாய்வு அமைப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.
சிரேஷ்ட அதிகாரிகள் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் பரவலுக்கு எதிராகப் போராடுவதற்கு, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை கால அவகாசம் எடுத்து அவர்களை மனச்சோர்வடையச் செய்வதே பாதாள உலகத்தின் இலக்காக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.