புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை
எதிர்வரும்18ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளதாக தேசிய மக்கள் கட்சியின் அதுராதபுரம் மாவட்டத் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 21ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடும் எனவும் அவர் கூறுகிறார்.
தேசிய மக்கள் சக்திக்கு சுமார் 160 எம்.பிக்களை பாராளுமன்றத்துக்கு வழங்கி மக்கள் தமது பொறுப்புக்களை நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் பணிகளை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
புதிய அமைச்சரவை ஆகக்கூடியது 25 அமைச்சர்களைக் கொண்டதாக இருக்கும்.
மேலும் 25 பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்றார்.
இதேவேளை, புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்களோ அல்லது அமைச்சரவை அல்லாத அமைச்சர்களோ நியமிக்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி அநுர திஸாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
புதிய பாராளுமன்றத்தின் முதல் அமர்வு எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது.
.