களுத்துறை தேர்தல் பிரதான
செயற்பாட்டு அறையில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளை எண்ணுவதற்கு இன்று மாலை விசேட பொலிஸ் பாதுகாப்பு பயன்படுத்தப்பட்டது.
காஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட ஒரே கட்சியின் இரு முக்கிய வேட்பாளர்களின் விருப்பத் தெரிவுகளில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக, முக்கிய வேட்பாளர் ஒருவர் விருப்பு வாக்குகளை மீள எண்ணுமாறு கோரியுள்ளதாக தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர்களான ரோஹித அபேகுணவர்தன மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் சற்று முன்னர் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்திற்குள் பிரவேசித்ததை காணமுடிந்தது.
இரண்டு முன்னாள் அமைச்சர்களின் ஆதரவாளர்களும் தேர்தல் செயல்பாட்டு அறைக்கு அருகிலேயே தங்கியுள்ளனர்.
2024 பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தின் ஒட்டுமொத்த உத்தியோகபூர்வ முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி 8 ஆசனங்களை வென்றுள்ளது.
தவிர, ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும், புதிய ஜனநாயக முன்னணி தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.