தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின்
கூற்றுப்படி, பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளின் சதவீதம் 60-65 சத வீதம் ஆகுமென தெரிவிக்கப்படுகிறது
வாக்காளர்கள் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்துள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க பிபிசி சிங்கள சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பை அறிவிப்பதில் ஆர்வமின்மை காணப்படுவதாக PAFRAL இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
2024 பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (14) மாலை 4 மணியுடன் முடிவடைந்தது.
வாக்குப்பதிவு மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று நள்ளிரவுக்கு முன்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தபால் வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்
இதேவேளை, தபால் வாக்குகளை எண்ணும் பணி ஏற்கனவே எண்ணும் நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டு 738,050 வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
வாக்குகளை எண்ணுவதற்காக நாடளாவிய ரீதியில் 2,034 நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வாக்குகளை எண்ணுவதற்கு சுமார் 80,000 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதல் உத்தியோகபூர்வ வாக்களிப்பு முடிவுகள் இரவு 10 மணிக்குள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.