கொழும்பு தாமரைக் கோபுர
வளாகத்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அந்த வளாகத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்றதாகவும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தனியார் பாதுகாப்பு நிறுவன அதிகாரி ஒருவரை அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி சுட்டதாகவும் பொலுஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர் 29 வயதுடையவர் எனவும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.