முன்னாள் இராஜாங்க அமைச்சர்
லொஹான் ரத்வத்தவின் மனைவி எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நுகேகொட நீதிவான் நீதிமன்றம் இன்று (04) இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
மிரிஹான பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்ட கார் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகுமாறு வட்ஸ்அப் ஊடாக அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.
இதன்படி, அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில், அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.