களுத்துறை தெற்கு பொலிஸ்
பிரிவுக்கு உட்பட்ட குருணைதாகொடவத்தை அதிவேக நெடுஞ்சாலை பாலத்திற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
களுத்துறை தெற்கு பொலொஸ்கம பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இக்கொலை நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், கொலைக்குப் பயன்படுத்திய கூரிய ஆயுதம் மற்றும் அவர் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை தெற்கு பொலோஸ்கம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.