சுமார் நான்கு கோடி ரூபா
பெறுமதியானதும் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்டதுமான மிட்சுபிஷி ஜீப் ஒன்று தெல்தெனிய பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த (31) திகன ஐ.சி.சி வீட்டுத் தொகுதிக்கு சொந்தமான வீடொன்றில் இந்தக் ஜீப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இந்த ஜீப் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பயன்படுத்தியதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஆளில்லாத வீடொன்றின் காராஜில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஜீப்பின் இலக்கத் தகடு தொடர்பான விசாரணையில், அது கண்டி பிலவல பிரதேசத்தில் பெண் ஒருவருக்கு சொந்தமான சிவப்பு நிற பிராடோ ரக ஜீப்புக்குரியது என தெரிய வந்துள்ளது.
அந்த ஜீப்பின் இலக்கத்தை பயன்படுத்தி இந்த ஜீப் பயன்படுத்தப்பட்டுள்ளதா பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
திகன பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போலி இலக்கத் தகடுகள் கொண்ட இந்த ஜீப் வண்டி தொடர்பான சட்ட ரீதியான அறிக்கையை பெற்றுக்கொள்ள பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.
கடந்த 26ஆம் திகதி மிரிஹான பொலிஸ் பிரிவில் அம்குதெனிய மண்டப வீதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீடொன்றின் கராஜில் லொஹான் ரத்வத்தவின் மனைவிக்குச் சொந்தமான சொகுசு வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் அவர் நவம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் உடல் நிலை காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க நுகேகொட பதில் நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.