தேர்தல் சட்டத்தின் பிரகாரம் பேரணியில்
பிரசாரம் செய்வது சட்டவிரோதமானது அல்ல என தேசிய மக்கள் சக்தி கண்டி மாவட்ட வேட்பாளர் குழுவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.டி.லால்காந்த தெரிவிக்கின்றார்.
இதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், எனவே இதுபோன்ற சுவரொட்டிகளை தொட வேண்டாம் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு கூறிக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி பேரணியின் பிரசார சுவரொட்டிகளை பொலிசார் கிழித்தமை தொடர்பில் கண்டி பேரணியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமது கட்சியின் சுவரொட்டிகளை கிழிக்கும் பொலிஸார், கண்டி மாவட்டத்தில் பல கட்சிகளின் சுவரொட்டிகளுக்காக வாரக் கணக்கில் காத்திருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.