கேகாலை - அவிசாவளை வீதியின் ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (02) விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அவிசாவளை நோக்கிச் சென்ற பஸ் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள வீட்டினுள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தினால், வீடு பலத்த சேதமடைந்துள்ளதுடன் பஸ்ஸில் பயணித்த பலர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.