(க.கிஷாந்தன்)

என்.சி இல் போதைப்பொருளை

கலந்து விற்பனை செய்த மூன்று பிள்ளைகளின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடம் இருந்து 1.850 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்ட கஞ்சா என்ற போதைப்பொருளை என்.சியில் கலந்து விற்பனை செய்து வந்த மூன்று பிள்ளைகளின் தாயார் (56) கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

சுகாதார அமைச்சினால் தடைசெய்யப்பட்ட என்.சி என்ற போதைப்பொருள் சிறிய பொதிகளில் அடைக்கப்பட்டு இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேக நபர் பொகவந்தலாவ கொட்டியாகல தோட்டத்தை சேர்ந்தவர் எனவும், சந்தேக நபரை பெண் பொலிஸார் கைது செய்து சோதனையிட்ட போது, விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட என்.சி என்ற போதைப்பொருளின் சிறிய பொதிகள் பலவற்றை உடலில் மறைத்து வைத்திருந்ததாகவும் அதிகாரி தெரிவித்தார்.

சந்தேக நபரை கைது செய்ததை அடுத்து, வீட்டில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.850 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி