ரயில் என்ஜின்கள் மற்றும் பெட்டிகள்
முறையான பராமரிப்பு இன்மையே பெரும்பாலான ரயில்கள் தடம் புரண்டதற்கு காரணம் என ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இதிபோலகே தெரிவித்தார்.
ரயில் பாதைகள் முறையாக பராமரிக்கப்படாததால் ரயில்கள் தடம் புரளும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் உதிரிப் பாகங்கள் இல்லாததால் பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
தொழில்நுட்ப அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் பற்றாக்குறை கடுமையாக உள்ளது என்றார்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 76 ரயில்கள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது