கப்முனைத் தொகுதியை ஹக்கீமின்
முஸ்லிம் காங்கிரஸோ ரிசாதின் கட்சியோ, அதாவின் கட்சியோ, பால் போத்தல் கட்சியோ வென்றால் ஹரீஸ் அரசியலில் சூனியமாகி விடுவார் என உலமா கட்சித் தலைவர் முபாறக் மெளலவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கை வருமாறு
மு. கா கல்முனைத் தொகுதியை வென்றால் ஹரீஸ் இல்லாமலே கல்முனையை வென்றுவிட்டோம் என ஹக்கீமும் அவர் வால்களும் கொக்கரிக்கும்.
ஆகவே ஹரீஸ் முன்பாக 4 தெரிவுகள் உள்ளன.
1. எமது ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸை வெல்ல வைப்பது. இதன் மூலம் கல்முனைத் தலைமையக கட்சியை வெல்ல வைத்த பெருமை அவருக்கு கிடைப்பதோடு 20 வருட ஏமாற்று கட்சிக்காரர்களுக்கு பாடமாக அமையும்.
2. NPP க்கு ஆதரவளித்து ஜனாதிபதியிடம் நல்ல பெயர் பெற்று எதிர்காலத்தில் கல்முனையை இனவாதிகளிடமிருந்து காப்பாற்ற முடியும்.
3. தனிக்கட்சி உருவாக்கி அதன் மூலம் மேலுள்ள நிலைப்பாட்டில் ஒன்றை அறிவித்தல். ஹரீஸ் தனிக்கட்சி அறிவித்தால் ஹக்கீமுக்கு வயிற்றால் போகும்.
தனிக்கட்சி ஆரம்பித்தால் அதற்கு உலமா கட்சி பூரண ஒத்துழைப்பு வழங்கும்.
4. மௌனமாக இருப்பது. ஆனாலும் இது அவரது அரசியலுக்கு ஆபத்தாகலாம்.