முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்க்ஷவின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு தரப்பினரின் எண்ணிக்கை 60ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவுக்காக சுமார்175 பாதுகாப்புப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
மேலும் அவரது பாதுகாப்புக்காக வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. இனிமேல் அவருக்கு இரண்டு ஜீப்கள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டி என்பனவே வழங்கப்படும்
அவரது பாதுகாப்புகாக நியமிக்கப்பட்டுள்ள 60 பேரைத் தவிர, ஏனைய அனைவரும் நவம்பர் மூன்றாம் திகதிக்கு முன்னர் அவர்களது பிரிவுகளுக்கு திரும்ப வேண்டுமென்பதுடன் மற்றைய அனைத்து வாகனங்களையும் மூன்று தினங்களுக்குள் திருப்பி அனுப்பவும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.