முதிர்ச்சியடைந்தவர்கள்
என்று கூறப்படும் அரசியல்வாதிகள் திருடுவதில் அனுபவம் உள்ளவர்கள் என தேசிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் உபுல் குமாரப்பெரும தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு மேலானவர்களாக நாம் இருக்க வேண்டும் என அரசியல்வாதிகள் நினைக்கும் காலம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் உருவாகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உபுல் குமாரப்பெரும மேலும் தெரிவித்தார்.
அனுபவமின்மை காரணமாக தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
ரணில் விக்கிரமசிங்க 1977ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு வந்து இளைஞர் விவகார அமைச்சராக பதவியேற்ற போது அவருக்கு அனுபவம் இருந்ததா? இந்த நாட்டில் அமைச்சர்கள்
பக்குவமானவர்கள் என்று தம்மைக் கூறிக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு திருட்டில் நல்ல அனுபவம் உண்டு.
எனவே, ரணில் விக்கிரமசிங்க கண்ணாடி முன் சென்று அந்தக் கதையைச் சொன்னால் அது சரியாக இருக்கும் என்றார்.