கைது செய்யப்பட்ட முன்னாள்
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வைக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நுகேகொடை மிரிஹானையில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவரை நுகேகொடை பதில் நீதிவானிடம் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, லொஹான் ரத்வத்த பயன்படுத்திய காரில் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இது சுங்கத்தின் ஊடாக சட்டபூர்வமாக விடுவிக்கப்படாதது எனவும் மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை எனவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார் .
இதற்கு மேலதிகமாக சட்டவிரோதமான முறையில் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு அசெம்பிள் செய்யப்பட்ட வாகனம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.