(பாறுக் ஷிஹான்)
எதிர்வரும் பாராளுமன்றத்
தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரும் கட்சியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான றிஸ்லி முஸ்தபா ஆதரித்து இளைஞர் ஒன்று கூடல் ஒன்று அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் நடைபெற்றது.
Rizley Musthaffa Education Aid - Social Organization இன் மூலமாக மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை அமுல்படுத்திய இளைஞர்களையும் றிஸ்லி முஸ்தபாவின் ஆதரவாளர்களையும் செயற்பாட்டாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்வாகவும் இந்த ஒன்று கூடல் இடம்பெற்றது.
இதன்போது பெரிய நீலாவணை, மருதமுனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, சவளக்கடை, சம்மாந்துறை, நிந்தவூர், ஒலுவில், சாய்ந்தமருது, கல்முனை, பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று உள்ளிட்ட பொத்துவில் பகுதிகளைச் சேர்ந்த கட்சியின் அம்பாறை மாவட்ட உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது அங்கு உரையாற்றிய றிஸ்லி முஸ்தபா
எமது அம்பாறை மாவட்டத்தில் உள்ள அரச ஊழியர்கள் இந்த முறை எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன், நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றம் என்னிலிருந்து ஆரம்பிக்கட்டும். அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல அரச ஊழியர்களும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதை நான் அறிவேன்
உண்மையில் அரச ஊழியர்கள் எமது நாட்டின், சமூகத்தின் முதுகெலும்புகள்.
நீங்கள் என்னைத் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்புவதன் மூலமாக இந்தப் பிராந்திய அரச கட்டமைப்பு நிச்சயமாக மாற்றத்தை நோக்கி நகரும் என்று நம்புகிறேன்.
எனது தந்தை முன்னாள் பிரதியமைச்சர் மர்ஹூம் மயோன் முஸ்தபாவின் பல கனவு செயற்றிட்டங்கள் என் கைவசம் உள்ளன. அவற்றை நிச்சயமாக முன்னெடுப்பேன்.
எனது சொந்த நிதி மூலமாக முடியுமானளவு எமது பிராந்திய பாடசாலைகளுக்கும் மாணவர்களுக்கும் உதவி உள்ளேன். அதை இடைவிடாது முன்கொண்டு செல்லவும், எமது பிராந்தியத்தில் கை நழுவிப்போன அரச காரியாலயங்களை மீண்டும் கொண்டு வரவும் என்னால் முடியும் என்று நம்புகிறேன் என்றார்.