முன்னாள் ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ள உதய ஆர் சேனவிரத்ன சம்பள ஆணைக்குழுவினால் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவிருந்த சம்பள அதிகரிப்புக்கான
நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும், அரசாங்கத்தால் வழங்க முடியாது என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோர் கூறுவது சிறுபிள்ளைத்தனமானது என புதிய ஜனநாயக முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கெஷால் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தெஹிவளை பிரதேசத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய கெஷால் ஜயசிங்க,
“அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. 2022ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட திஸ்ஸ தேவேந்திரா சம்பள ஆணைக்குழுவில் இருந்து 2018ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ரணுகேஜ் ஆணைக்குழு வரை சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண ஆணைக்குழுக்கள் முயற்சித்த போதும் அந்த ஆணைக்குழுக்கள் இந்தப் பிரச்சினைக்கு வெற்றிகரமான பதிலைக் கொடுக்கவில்லை.
அதற்குக் காரணம் இலங்கையில் தற்போதுள்ள அரச ஊழியர்களின் சம்பள முறையானது பல்வேறு சேவைப் பிரிவினருக்கு அவர்களின் பேரம் பேசும் சக்தியின் அடிப்படையில் வெவ்வேறு காலங்களில் வழங்கப்படும் கொடுப்பனவை அடிப்படையாகக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.