புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில்
பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்ட விசேட தேடுதலின்போது பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் உள்ளிட்டவற்றை கண்டுபிடித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படை புஸ்ஸ சிறைச்சாலை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புஸ்ஸ உயர்பாதுகாப்பு சிறைச்சாலையின் பழைய பிரிவின் ஏ, பி, சி மற்றும் டி ஆகிய பிரிவுகளில் இந்த விசேட சோதனை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அங்கு 11 கையடக்கத் தொலைபேசிகள், 13 சிம்கார்டுகள், சார்ஜர்கள், ரவுட்டர்கள், உதிரி பெற்றரிகள், டேட்டா கேபிள்கள், அடப்டர்கள் மற்றும் உபகரணங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது தவிர, 03 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயின், 01 கிராம் ஐஸ் போதைப்பொருள், புகையிலை துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.