முன்னாள் இராஜாங்க அமைச்சர்
லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் அவர்களது வீட்டில் இல்லை என தெரிய வந்துள்ளது.
அவர்களது கைத்தொலைபேசிகளும் இயங்கவில்லை என கூறப்படுகிறது.
மிரிஹான அமுதேனய பிரதேசத்தில் இவருக்குச் சொந்தமான வீட்டில் பதிவு செய்யப்படாத சொகுசு கார் ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதையடுத்து அவர்கள் காணாமல் போயுள்ளனர்.
குறித்த காரின் செசி மற்றும் எஞ்சின் இலக்கங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது அந்தக் கார் இந்த நாட்டில் பதிவு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.