ஜனநாயக குரல் கட்சியின் தலைவரும்
நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான ரஞ்சன் ராமநாயக்கவினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று சமூகவலைதளங்களில் பகிரப்படுகிறது.
தனது குடியுரிமையை இரத்துச் செய்யும் முடிவை இரண்டு ஆண்டுகள் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இந்தக் கடிதத்தை சமூக வலைதளங்களில் பகிர்வது குறித்து உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று கட்சியின் ஊடகப் பேச்சாளர் ரவி குமுதேஷ் கூறுகிறார்.
குறித்த கடிதம் ஜனாதிபதிக்கு இரகசியமாக வழங்கப்பட்டது ஒன்றல்ல. இருப்பினும் சமூக ஊடகங்களில் அது எவ்வாறு சென்றது என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.