வாரியபொல - வாகொல்ல பிரதேசத்தில்
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த பெண் ஒருவர் வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வாகொல்ல பண்டாரகொஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரும் சந்தேக நபரும் அரச காணி ஒன்றில் 2 வீடுகளில் வசித்து வருவதும் வீடுகளுக்குச் செல்லும் வழியில் முறிந்து வீழ்ந்த மரத்தின் கிளைகளை அகற்றிக் கொண்டிருந்தபோதே சந்தேக நபருக்கு உயிரிழந்தவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய 66 வயதுடைய மேற்படி பகுதியைச் சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சடலம் வாரியபொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.