E-8 வீசா திட்டத்துக்கான
அரசாங்கத்தின் அனுமதியைப் பெறாமல் முன்னாள் அமைச்சர் தென் கொரியாவுடன் அங்கீகரிக்கப்படாத வகையில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளிப்படுத்தியுள்ளது.
பணியகத்தின் கூற்றுப்படி, E-8 வீசா திட்டத்தின் கீழ் தென் கொரியாவுக்கு தொழிலாளர்களை அனுப்பவோ அல்லது அதனுடன் தொடர்புடைய எந்தவொரு கட்டணத்தையும் வசூலிக்கவோ இலங்கையில் உள்ள எந்தவொரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கும் அனுமதி இல்லை.
இந்த அங்கீகரிக்கப்படாத திட்டத்துக்கு தாம் எந்தப் பொறுப்பையும் ஏற்காது என்று பணியகம் தெளிவுபடுத்தியதுடன், அங்கீகரிக்கப்பட்ட E-9 விசாத் திட்டம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தியது.
கடந்த அரசாங்க காலத்தில் இந்த அமைச்சின அமைச்சராக மனுஷ நாணயக்கார கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.