பொதுத் தேர்தல் தொடர்பான
பல்வேறு முறைப்பாடுகளின் அடிப்படையில் 5 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஆதரவாளர்கள் 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்களை அகற்றுவது தொடர்பாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதன்போது கருத்துக்களை வெளியிட்டார்.