leader eng

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யும் மனநிலையில் அரசாங்கம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

“கடந்த மாதம் 23ம் திகதி பாராளுமன்ற குழுத்தலைவர் என்ற ரீதியில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் சபாநாயகருக்கும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் நிலஅபகரிப்பு, மனித  புதைகுழிகள் தொடர்பான விடயங்கள் பேசுவதற்கான கோரிக்கையை முன்வைத்திருந்தேன். அதற்காக சந்தர்ப்பம் 22ம் திகதி வெள்ளிக்கிழமை கிடைத்துள்ளது.

“குறித்த ஒரு நாள் விவாதத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட மனித புதைகுழிகளுக்கான சர்வதேச விசாரணை, காணிகள் அபகரிப்பு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தவுள்ளோம்” என தெரிவித்தார்.

தொடர்ந்து நேற்றைய தினம் மன்னார் காற்றாலை தொடர்பான அமைச்சர் தொடர்பிலான சந்திப்பு மற்றும் அரசியல் கைதிகள் விடுவிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி