யாழ்ப்பாணம், பருத்தித்துறை

பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கற்கோவளம் - புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று (31) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் கொங்கிறீட் கற்களால் தலையில் தாக்கப்பட்டுக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
 
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் மாணிக்கம் சுப்பிரமணியம் ( 54), அவரது மனைவியான சுப்பிரமணியம் மேரி ரீட்டா ( 53) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
 
அவர்களின் வீட்டுக்கு நேற்று காலை அயலவர்கள் சென்று பார்த்தபோது இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்னர்.
 
இந்நிலையில், கொலைச் சப்பவம் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
காங்கேசன்துறை பிரிவுக்கு உட்பட்ட பொலிஸ் உளவுத் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொலையாளிகள் மூவரில் இருவரைக் கைது செய்துள்ளனர். ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.
 
தொழிற் போட்டியினால் மூவர் சேர்ந்து இவர்களைக் கொலை செய்துள்ளனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி