<அறியாமை இருளை அகற்றி

ஞானத்தின் ஒளியால் உலகமே ஒளிமயமாகட்டும்

உலகெங்கிலும் உள்ள இந்து மக்களின் இதயங்களை ஒளிமயமாக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு, இலங்கை மற்றும் உலகெங்கிலும் வாழும் இந்து மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
 
பெரும் இருளை ஒரு சிறு விளக்கொளியால் அகற்ற முடியும். அதற்குத் தேவையானது சரியான பார்வையும் வழிகாட்டுதலும் மட்டுமே. அறியாமை இருளை அகற்றி ஞானத்தின் ஒளியால் உலகை ஒளிமயமாக்கும் தீபாவளி பண்டிகை நமக்கு உணர்த்துவதும் இதுவேதான்.
 
ஒரு நாடாக இந்த தருணத்தில் நமக்கு பல சவால்கள் உள்ளன. இந்த சவால்கள் அனைத்தையும் வெற்றி கொள்ள முடிவது இனம், மதம், சாதி, குலம், கோத்திர வேறுபாடுகளின்றி அனைவரும் கைகோர்த்தால் மட்டுமே. அவ்வாறு அனைவரும் கைகோர்க்க இன்று ஏற்றும் ஒரு விளக்கொளி வழிவகுக்கட்டும். அன்பு, கருணை, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகிய அனைத்து உணர்வுகளையும் ஒளிரச் செய்து, ஒருவருக்கொருவர் வெறுப்புக்குப் பதிலாக சகோதரத்துவத்தை பரப்பும் தீபாவளி விளக்கொளியால் உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையட்டும் என பிரார்த்திக்கிறேன்.
 
சஜித் பிரேமதாச 
தலைவர் -ஐக்கிய மக்கள் சக்தி

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி