எதிர்வரும் பொதுத் தேர்தலில்
கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியிலிருந்து வேட்புமனுவை சமர்ப்பித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்யாமலேயே நிராகரிப்பதாக உயர் நீதிமன்றம் இன்று (30) தீர்ப்பளித்துள்ளது.
பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனைகளை ஏற்றுக் கொண்டதன் பின்னரே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது.
பிரீதி பத்மன் சூரசேன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கம்பஹா மாவட்ட சுயேட்சை வேட்பாளர் மஹிந்த சேனாநாயக்கவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.