(க.கிஷாந்தன்)
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக
ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள்களை எடுத்து வந்த நான்கு இளைஞர்கள் ஹட்டன் பொலிஸாரால் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன், டிக்கோயா, சாஞ்சிமலை பகுதியைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் தொழில் புரியும் இவர்கள், தீபாவளி பண்டிகைக்காக தமது ஊர் பகுதிக்கு வந்துள்ளனர். அவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட, பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது ஐஸ், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் என்பன இவர்களிடமிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
22 மற்றும் 28 வயதுகளுக்கு இடைப்பட்ட குறித்த இளைஞர்கள், விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆபடுத்தப்படவுள்ளனர்.