பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு
அரசியலமைப்பு பற்றிய புரிதல் இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு அமைச்சரவையால் ஆளப்படுகிறது, அதிகாரிகளால் அல்ல என்றும் அவர் கூறினார்.
அரசியலமைப்பு புரியவில்லை என்றால் அது குறித்து கற்பிக்க நான் தயார் அல்லது தினேஷ் குணவர்தனவை அனுப்பத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கவில்லை என்ற பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்