நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத்
தேர்தலுக்கான திகதி எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது என்பது உள்ளிட்ட தேர்தல் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்துச் செயற்பாடுகள் தொடர்பிலும் முழுமையான அறிக்கையொன்றை சட்டமா அதிபரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கையளித்துள்ளது.
இது தொடர்பான தகவல்களை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அண்மையில் அறிவித்திருந்தது.