(எச்.எம்.எம்.பர்ஸான்)

ஹிஸ்புல்லாஹ் ஐக்கிய மக்கள்
கூட்டணியில் தேர்தல் கேட்க வேண்டும் என்று கடும் பிரயத்தனத்தை எடுத்துக் கொண்டார்.
 
தான் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டால் தோற்றுப்போய் விடுவேன் என்று ஒப்பாரி வைத்துத் திரிந்த ஹிஸ்புல்லாஹ் தற்போது பொய்க் கணக்குகளை கூறி, தான் வெற்றி பெறப் போவதாக சொல்லித் திரிகிறார் என்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் எம்.எம்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
 
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் துடித்தாலும் 22,000க்கு மேற்பட்ட வாக்குகளை பெற முடியாது.
 
ஹிஸ்புல்லாஹ்வின் சாம்ராஜ்யம் காத்தான்குடியில் சரிந்து விட்டது. அது இந்த மாவட்டத்தில் இருக்கும் எல்லோருக்கும் தெரிவும்.
 
கல்குடாவில் ஒரு பிரதான வேட்பாளரை களமிறக்கிவிட்டு அவரையும் சேர்த்துக் கொண்டு அவருக்கும் வாக்குச் சேர்க்கின்றேன் என்ற போர்வையில் ஹிஸ்புல்லாஹ் வீடு,வீடாக, வீதி,வீதியாக திரிகின்றார்.
 
ஹிஸ்புல்லாஹ்வைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை அவரது கட்சித் தலைவர் சொல்லி இருக்கிறார் அவர் ஒரு உலகப் புகழ்பூத்த அண்டப்புளுகன் என்று.
 
அவராலே பாராளுமன்றம் செல்ல முடியாத நிலை உள்ளபோது அவரது கட்சியிலிருந்து அவருடன் இன்னொருவரையும் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பு இருப்பதாக கணக்குக் காட்டுகின்ற விடயம் அவர் மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறாரா? இல்லை அவர் இன்னும் பொய், புரட்டு சொல்லுவதிலிருந்து திருந்திக் கொள்ளவில்லையா? எனும் கேள்வி என்னிடத்தில் இருக்கிறது.
 
அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்ததே இலகுவில் எம்.பி ஆக வேண்டும் என்பதற்காகவே. ஆனால் துரதிஷ்டவசமாக அலிசாஹிர் மௌலானா இல்லாமல் போனதன் பின்னர் அவருக்கு உளறல் எடுத்துவிட்டது.
 
இந்த நாட்டில் அதிகம் பொய் சொல்லும் நம்பிக்கையீனமான ஒரு அரசியல்வாதி என்றால் அது ஹிஸ்புல்லாஹ்தான் என்று அமீர் அலி தெரிவித்தார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி