(பாறுக் ஷிஹான்)

ஹரீஸ் எம்பி 20 க்கு கைதூக்கிய
காரணத்தினால் இம்முறை வேட்புமனு வழங்கப்படவில்லை. சரி, அப்படி என்றால், பைசல் காசிம் என்ன 200 க்கா கைதூக்கியவர் ? அவருக்கு எப்படி வேட்புமனு வழங்கியது?
 
இவ்வாறு கேள்வி எழுப்புகிறார் நல்லாட்சி தேசிய முன்னணியின் ஆதரவு “வி ஆ வன்”( we are one) அமைப்பின் இணைப்பாளர்  முகம்மட்  ரஸ்மின்
 
அம்பாறை ஊடக மையத்தில்  எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு சமகால அரசியல் தொடர்பாக நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்…
 
நாட்டில் தமிழ் பேசும் சமூகங்கள் பல பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகிறது. இதுவரை இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அவற்றுக்கு எந்த தீர்வையும் காணவில்லை. அரசியலுக்காக பிச்சைக்காரனின் புண்போல அதைப் பயன்படுத்தி வருகின்றனர்.
 
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் நாட்டுக்கு தரமான தலைவர் அநுர கிடைத்துள்ளார். நாட்டுக்கு தேவையான நல்ல தலைவரை தெரிவு செய்யுங்கள் என்று அன்று அவர் கூறினார். இப்போது கூறுகிறார் உங்களுக்கு தேவையான உங்கள் தலைவர்களை தெரிவு செய்யுங்கள் என்று. அதுதான் உண்மை.
 
இப்போது பாராளுமன்றத் தேர்தல் வந்திருக்கிறது. எமக்கு தேவை உண்மையாக தலைவர்கள்.
 
அறுகம்பை சம்பவத்துக்கு இதுவரை யாருமே வாய் திறக்காதது ஏன்? பொத்துவிலில் உள்ள முஷாரப்பே வாய் திறக்கவில்லை.
என்ன அநுரவுக்கு பயந்து நிற்கிறீர்களா?  அல்லது தமது இருப்பு கேள்விக் குறியாக போகும் என்று நினைக்கிறீர்களா?
இவர்களா தலைவர்கள்?
 
கடந்த காலங்களில் எமது தலைவர்களாக இருந்தவர்கள் என்ன செய்தார்கள் என்பதை உலகறியும். தயவு செய்து சமூகத்துக்கு உதவி செய்ய வேண்டுமாக இருந்தால் இந்த போட்டியில் இருந்து ஒதுங்கி கொள்வது நல்லது .புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
 
சமூகத்துக்கு முழுக்க முழுக்க அசிங்கத்தை அள்ளித்தந்தவர்கள் எமது இஸ்லாமிய தலைவர்கள் .ஜனாஸா எரிப்புக்கு துணைபோன இவர்கள் இனத்துரோகிகள்.
ஹக்கீம் 20 வருட காலம் எம்பியாக இருந்து சாதித்ததென்ன? 20க்கு கை தூக்கியதன் பலன் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டன. அப்போது ஹாபிஸ் நசீர் சொன்னார் 150 பெட்டிகளே எரிக்கப்பட்டன  அவற்றில் ஜனாஸாக்கள் இல்லை என்று. அதனையும் ஹக்கீம் கைகட்டிபார்த்துக் கொண்டிருந்தார்.
 
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் 2,500 இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். தலதா மாளிகை முன்பாக பௌத்த பிக்குமார் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதனையடுத்து முஸ்லிம் எம்பிக்கள் பதவி  விலகினார்கள். ஆனால், வெறும் 13 நாட்களின் பின்னர் மீண்டும் பதவியேற்றார்கள்.
எப்படி இவர்களின் நாடகம்?
 
அவர்களுக்கு அரசியல் அதிகாரம் என்பது சேர்ட் போடுவது மாதிரி. சரி இந்த அதிகாரத்தை வைத்து சமூகத்துக்கு என்ன செய்தார்கள். ?
திகன கலவரம் அழுத்கம கலவரம் அக்குறணை கலவரம் என்பனவற்றுக்கு  நீதி கிடைத்ததா? இல்லை. ஒரு வெள்ள பாதுகாப்பை தானும் ஏற்படுத்த முடிந்ததா? இல்லை .
 
மேடைகளில் குர்ஆன் ஹதீஸ் முழங்குகிறார்கள் . வெட்கமா இல்ல.?
 
மக்களே இனம் கண்டு இவர்களை விரட்ட வேண்டும் .ஹக்கீம் என்றாவது சமூகத்துக்காக எங்காவது கோர்ட் போட்டு நீதிமன்ற போனாரா? இல்லை.
ரணில் போன்றோருக்கு ஆதரவாக மட்டுமே கோர்ட் ஏறினார். அம்பாறை திகன அளுத்கம வேருவல இப்படி முஸ்லிம் சமூகத்துக்காக கோர்ட்  போட்டு நீதிமன்றில் ஏறினாரா? இல்லை .
 
இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. இவர்களை நார் நாராய் கிழித்து தொங்கவிடுவோம்.முகா சொல்கிறது ஒன்பது இடங்களில் வெல்வோம் என்று. மயில் சொல்கிறது பத்து இடங்களில் வெல்வோம் என்று. முதலில் முடிந்தால் உங்கள சொந்த ஆசனத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள் பார்க்கலாம் .
 
எமது நல்லாட்சி தேசிய முன்னணியில் பணம் இல்லை பதவியில்லை.வாகனமில்லை. இலஞ்சம் இல்லை ஊழல் இல்லை.
 
நாங்கள் இன்று கொழும்பிலிருந்து எங்களது பண்த்தில் வந்திருக்கிறோம் எங்கள் பணத்தில் தான் பேசிக் கொண்டிருக்கிறோம் பயணம் செய்கிறோம்.
ஆனால் எங்களிடம் இருப்பதெல்லாம் உண்மை நேர்மை.
 
தேசிய ரீதியிலே மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அதேபோல் பிராந்தி ரீதியிலும் அத்தகைய மாற்றம் தேவை. எனவே இந்த பழைய ஏமாற்றுப் பேர்வழிகள் இனத் துரோகிகள் அனைவரையும் துரத்தியடித்து புதிய நல்ல முகங்களைத் தேர்ந்து ஊழலற்ற அரசாங்கத்தை ஏற்படுத்த மக்களே நீங்கள் உதவி செய்ய வேண்டும். என்றார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி