தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா

அதிபராக நியமித்தமை தொடர்பில் இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் இன்று (29) அனுமதி வழங்கியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதி பதவியில் இல்லாததால் அவரை பிரதிவாதியாக குறிப்பிடுமாறு இளம் ஊடகவியலாளர் ஒன்றியம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், உயர. நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார். 
 
இதன்படி, இந்த அடிப்படை உரிமை மனுவில் பிரதிவாதியாக ரணில் விக்ரமசிங்கவை பெயரிடுமாறு பிரிதி பத்மன் சூரசேன மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
 
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமை அரசியலமைப்புக்கு முரணானது என கூறி இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தது.
 
அத்துடன், ஜனாதிபதியின் சார்பில் சட்டமா அதிபர், சபாநாயகர் மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறினார்களா என்பதைக் கண்டறியவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
 
இதன்படி, இந்த தீர்மானத்தை எடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்து விலகியதால், அவரின் விலக்கு காலம் முடிவடைந்துள்ளதாகவும், அதற்கமைய,  அவரின் பெயரை பிரதிவாதியாக்க முடியும் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இன்று தெரிவித்தார். 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி