பொது இடங்களில் இலவச
Wi-Fi ஐ பயன்படுத்தும்போது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது
இதுபோன்ற இடங்களில் வைஃபை பயன்படுத்தும்போது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவது குறித்து தமக்கு பல முறைப்பாடுகள் வந்துள்ளதாக அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.
எனவே, பொது இடங்களில் இலவச வை-பை பயன்படுத்தும்போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
"இலவச வைஃபை சேவைகளுடன், பிறர் போலியான வைஃபை சேவைகளை வழங்கலாம் மற்றும் சேவையின் மூலம் தங்கள் சேவைகளை வழங்க பொது மக்களை வழிநடத்தலாம், பின்னர் அணுகல் கடவுச்சொற்கள் மற்றும் பிற அனைத்து தகவல்களையும் திருடலாம் எனவும் கூறியுள்ளார்.