ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கிருஷாந்த புலஸ்தி, அவரது வீட்டில் படுக்கையில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கழுத்து நெரிக்கப்பட்டு கட்டிலில் கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் நேற்று (28) கண்டெடுக்கப்பட்டதாக கேகாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொல்லப்பட்டவர் ஹெட்டிமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடையவர்.
உயிரிழந்தவரின் மனைவி வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளார்
வீட்டில் இருந்த அலுமாரிகள் அனைத்தும் திறந்து காணப்பட்டமை விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகந பர்களின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த பெண் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டுக்குள் வந்த சிலர் அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தி விட்டு காருடன் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், திருடப்பட்ட கார் பிந்தெனிய பொலிஸ் பிரிவில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீதிவான் விசாரணையின் பின்னர் சடலம் கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.