இலங்கைக்கு தமது நாட்டுப்
பிரஜைகள் வருவதில் எவ்வித பயணத்தடையும் விதிக்கப்படவில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பிரஜைகளுக்கு அறுகம்பை பகுதிக்கு செல்லும்போது அவதானமாக செயற்படுமாறு மாத்திரமே ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அருகம்பை சுற்றுலா பகுதிக்கு விடுக்கப்பட்ட தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து அறிந்த போது இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இது குறித்து ஆலோசித்தோம். அவர்கள் விரைவாக நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
அது மாத்திரமின்றி அவர்கள் பாதுகாப்பு விடயத்தில் வழங்கும் ஒத்துழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது. வெளிப்படைத் தன்மையானது.
பாதுகாப்பு விடயத்தில் மாலைதீவு, பிரான்ஸ், இத்தாலியை போன்று இலங்கை தரம் இரண்டில் உள்ளது. பல ஆண்டுகளாக அது அப்படியே தான் உள்ளது. பாதுகாப்பு விடயத்தில் அமெரிக்கர்களுக்கு பயணத் தடை விதித்துள்ளதாக கூறும் செய்திகள் போலியானவை என்றார்.