உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு
தொடர்பாக விசாரணை நடத்திய இமாம் குழுவின் அறிக்கையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (28) வெளியிட்டார்.
பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை வெளியிட்டார்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து பிரித்தானியாவின் 'செனல் 4'வின் குற்றச்சாட்டுகளை ஆராய முன்னாள் நீதிபதி ஐ.எஸ். இமாம் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டது.
செனல் 4 தொலைக்காட்சி ஊடாக ஒரு நபர் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்படி, அந்த நபர் யார் என்பதை கண்டறிய விசேட விசாரணைக் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த சம்பந்தப்பட்ட ஓய்வுபெற்ற அதிகாரியை அம்பலப்படுத்தும் என்பதாலும் அவருக்கு அரசாங்கத்தில் பதவி வழங்கியதாக குற்றம் சுமத்தப்படுவதாலும் தற்போதைய அரசாங்கம் இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்தவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.